Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. ஜாலியோ ஜாலி தா…. “9 நாள்கள் பள்ளிகள் விடுமுறை”…. வெளியாகும் அறிவிப்பு….!!!!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்பு கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு ஒருவாரம் விடுமுறை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடை பெறவில்லை என்றாலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு,
17ஆம் தேதி தமிழ்,
18ஆம் தேதி ஆங்கிலம்,
20ஆம் தேதி கணிதம்,
21ஆம் தேதி விருப்ப பாடம்,
22ஆம் தேதி அறிவியல்,
23ஆம் தேதி தொழிற்கல்வி பாடம்,
24ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன

12ஆம் அதே போல வகுப்பு மாணவர்களுக்கு
17ஆம் தேதி தமிழ், 18ஆம் தேதி ஆங்கிலம்,
20ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்,
21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்,
22ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை,
23ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு,
24ஆம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |