ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 பேர் 100 சதவீத மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளார்கள். மேலும் இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஐந்து தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது. தேர்வு முடிவுகளை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்ப படிவ எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் ஆகியவை அவசியம். மேலும் தேர்வு முடிவுகளை காண https://jeemain.nta.nic.in/ என்ற இளையதளத்தில் சென்று பார்க்கவும்.