கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த வருடத்திற்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு டிசம்பர் 31 க்குள் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் நடப்பாண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிற்பட்டோர் நலத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை பதிவேற்றம் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப்போலவே கோப்புகளை முழுமையாக சமர்ப்பிக்கும்படி கல்வி நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.