தமிழகத்தில் மாநில அரசு சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக பெரும்பாலான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் டிச.,17ஆம் தேதி 9th மாணவர்கள் எழுதிய ஊரக திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. விடையை https:// dge1.tn.gov.in என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம். விடை குறிப்பில் மாற்றம் இருந்தால் டிச.,31க்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கப்படும்.