Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே பள்ளிக்கு செல்ல ரெடியா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வு காகித முறையில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், எழுத்து தேர்வாக காகித முறையில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனால் ஜனவரி மாதம் நேரடியாக மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பொதுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |