தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவடைகிறது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுக்குள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.