தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வருகின்ற 17 ம் தேதி நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருப்பது போல சான்றிதழ் தொலைத்தவர்கள் இடம் கட்டணம் பெறுவதாக அண்ணா பல்கலைக் கழகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே தான் கட்டணம் பெறுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்துவது சரியானதாக இருக்கும்.
பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுவது குறித்து வருகிற 17-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் முறைகேடுகள் இதற்கு முன்பாக நடைபெற்றுள்ளதாகவும் அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது அவர் கூறியுள்ளார். மேலும் பொரியல் கலந்தாய்விற்கு அலைபேசிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளியிலேயே ஆன்லைன் மூலமாக பொறியியல் கலந்தாய்வு பதிவுசெய்யவும், facilitation சென்டர்கள் மூலமாக பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசு கல்லூரிகளில் எல்லா இடங்களையும் நிரப்ப வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.