Categories
மாநில செய்திகள்

மாணவர்களே மதியம் 12 மணிக்கு ரெடியா இருங்க…. 10 ஆம் வகுப்பு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு கொடுக்கும் விதமாக துணை தேர்வுகளை அரசு நடத்தி முடித்தது. அதற்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு மறு கூட்டம் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் மீது மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.மாணவர்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |