மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
இளங்கலை நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 20ந்தேதி (இன்று) இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் முடிவடைகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.