மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விழும் நிலையில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வை எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி இன்று முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மார்ச் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இதில் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories