தமிழகம் முழுவதும் இன்று காலை காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.
மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.