புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டி வெளியிட்டார். இந்த நாள்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கல்வித்திறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியது, புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
அதனைதொடர்ந்து முதல்வர் ரங்கசாமியின் அறிவித்தலின் படி 2022-2023 கல்வி ஆண்டுக்கு புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10,12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்று முதல் அரசு பள்ளிகளில் 11 வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் 11ஆம் வகுப்பு தொடங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். பள்ளிகள் திறக்கும் நாள் முதல் மாணவர் பஸ் இயக்க திட்டமிட்டு உள்ளோம். அதுமட்டுமில்லாமல்அன்றைய தினம் பாட புத்தகங்கள், சீருடை வழங்கப்படும். புதிதாக 70 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க உள்ளம் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி ஆசிரியர்களை நிரந்தரம் செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.