Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. தமிழகத்தில் 1 – 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அது குறித்த அறிக்கை இன்று முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி 30ஆம் தேதி முடிவு வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |