தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது.
பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக கடந்த 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பொது கலந்தாய்வின் முதல் சுற்றுகள் இன்று வெளியாக உள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் வரும் 30ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தகவல்கள் உள்ளது.