வரும் 27ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது .
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மே 31ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிவிக்கலாம். ஜூலை 7ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே ரிசல்ட் வெளியிடப்படுகிறது.