நாம் பள்ளிகளில் படிக்கும் போது நமக்கு ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் தருவார்கள். இது மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் பிடிக்காது. அந்த வீட்டுப் பாடத்தை யார் கண்டுபிடித்து இருப்பார் என பலமுறை யோசித்திருப்பார்கள். இந்நிலையில் வீட்டுப்பாடத்தை யார் கண்டுபிடித்தார் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். இந்த வீட்டுப்பாடத்தை ராபர்ட் நெவிலிஸ் என்பவர் தான் கண்டுபிடித்தார்.
இவர் இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வகுப்பில் ஒழுங்காகப் படிக்காத மாணவர்களுக்காக வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். இந்த வீட்டு பாடம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர் தான் ஆசிரியராக பணியாற்றிய பள்ளியில் தான் முதலில் வீட்டுப்பாடத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் நாளடைவில் உலகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டது.