அரியானாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த காரணத்தினால் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை அரியானா மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 23-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வாய்ப்புகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறு படிக்கலாம் எனவும், பெற்றோர்களிடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. நேரடி வகுப்புகளில் மாணவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வற்புறுத்த மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.