Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்களை அடிக்குறாங்க…. “பெற்றோர்கள் போராட்டம்”…. பள்ளியில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரி மேட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள். அதனால் ஒரு மாணவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து கோபி கல்வி மாவட்ட அதிகாரி பழனி பள்ளிக்கு வந்து மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விசாரணை செய்தார். அப்போது அவர்  பிரச்சினை குறித்து புகார் மனு கொடுங்கள். அதை பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பேன்   என்று தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெற்றோர்களும், மாணவர்களும் புகார் மனு எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

Categories

Tech |