Categories
மாநில செய்திகள்

மாணவர்களை ஒருநாள் பள்ளிக்கு வரவழைக்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கி விட்டது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,000ஐ நெருங்கி விட்டது. இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பின் பள்ளி மாணவர்களின் நலன் கருதி முதல் கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதால் அம்மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து உணவு வழங்க வேண்டும். நடப்பு ஜனவரி மாத‌த்துக்கான  மொத்த பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு அதற்குரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டு நோயை ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க தலைமையாசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

Categories

Tech |