தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி வற்புறுத்தக் கூடாது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். முதல்வரிடம் அளித்த அறிக்கையில், தொடக்கப்பள்ளி வகுப்புகளையும் சேர்த்து திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் குறைந்தபட்சம் நடுநிலைப்பள்ளி வகுப்புகளை மட்டுமாவது திறக்கலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.