பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “திருவண்ணாமலை சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகைவிட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தசெய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை ஆகும். கல்வி மட்டுமின்றி கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டியதுதான் ஆசிரியரின் பணி. அதனைத் தான் ஆசிரியர்கள் செய்து இருக்கிறார்கள்.
ஆனால் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் கிடையாது. இது தவறான முன் உதாரணமாகிவிடும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகளும் ஊர்மக்களும் சாலை மறியல் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன..? என்பதை உணர முடியும். ஆகவே தவறுகள் திருத்தப்பட வேண்டும். எனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனே பணியில் சேர்க்கவேண்டும். அத்துடன் இரு ஆசிரியர்களின் பணியிடமாற்றத்தை ரத்துசெய்ய வேண்டும். மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத்தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.