பீகாரில் அரசு பள்ளி மாணவர்களை பகுதி நேரமாக கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் கூலி வேலை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் முன் வந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அவர் இந்த சம்பவம் இதற்கு முன்னரும் அரங்கேறியுள்ளது. இப்போதுதான் வெளிவந்துள்ளது. பள்ளியில் பராமரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும், வருகை மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .பள்ளி மாணவர்களை இப்படி வேலை செய்ய சொல்வது சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிபதி கூறினார்.