Categories
மாநில செய்திகள்

மாணவர்களை விட…. மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம மதிப்பில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 3,80,500 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை 4,35,973, பொதுப்பாடப்பிரிவு : 7,64,593, தொழிற்பாடப்பிரிவு : 51,880, தேர்ச்சி பெற்றவர்கள் : 100%. இதில்  600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |