மாணவர்களோடு உல்லாசம் அனுபவித்த ஆசிரியையும், அது குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரம் பகுதியில் 45 வயது உடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவரை பிரிந்த ஆசிரியை கல்லூரியில் படிக்கும் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியைக்கும் வீரமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த ஆசிரியையின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆசிரியை தனது வீட்டிற்கு டியூஷன் படிக்க வந்த 2 மாணவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவர்களை தனியாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்ததோடு, அதனை வீரமணி மூலமாக வீடியோ எடுத்துள்ளார். அதன் பிறகு அந்த ஆபாச வீடியோவை ஆசிரியை பார்த்து ரசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவர்களுடன் எடுத்த வீடியோ ஒன்றை வீரமணி தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் ஒருவர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வீடியோ குறித்து கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகபரவியது. இதனையடுத்து மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.