மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த கண்காட்சியானது மாணவர்களின் அறிவை வளர்த்து கொள்ள உதவுகிறது. மேலும் செல்போன், கணினி, கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகள் இல்லாத காலத்திலேயே பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிஞர்கள் கண்டுபிடித்தனர். தற்போது உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிரேஷன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்