Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் ஆபாச செயலி…. தமிழகத்தில் அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மத்திய பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு கல்வித்துறை ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை  கண்காணிப்பது மட்டுமல்லாமல் செல்போன் மற்றும் மடிக்கணினியில் தேவை இல்லாத எந்த ஆப்-களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வயது வந்தோருக்கான செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடல்ட் செயலி, வெப் சீரிஸ் பார்க்கிறார்களா என்பதை கண்காணித்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் website மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாவதை தடுத்து படிப்பில் கவனம் செலுத்த பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இதையடுத்து பெற்றோர்களின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு  மற்றும் கடன் அட்டைகளை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க அளிக்கக் கூடாது. அதன்படி மாணவர்களின் நடத்தையின் மீதும் சந்தேகம் ஏதும் தெரிந்தால் உடனடியாக மாணவர்களின் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |