தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு சொல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். இதனை கண்டிக்கும் ஓட்டுநர்கள், மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறியதாவது, பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதனையும் மீறி சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமில்லாமல், அவர்களது பெற்றோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.