தேனியில் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி பெயரில் போலியாக செயல்படும் மையங்களை நம்பி மாணவர்கள் ஏமாற்ற வேண்டாம் என பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது பற்றி அவர் பேசும்போது, இந்த பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்காக செயற்கை மையம் தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலை நேர கல்லூரிகளில் மட்டுமே செயல்படுகின்றது. ஆனால் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பல்கலை மையம் என கூறிக்கொண்டு சில தனியார் நிறுவனங்கள் போலி மையங்கள் நடத்தி வருகின்றது. அவற்றில் மாணவர்கள் சேர்ந்து பணத்தை இழக்க வேண்டாம். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் போலி மையங்கள் மீது காவல்துறை மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Categories