Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று 80 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் என்ற பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பில் 93 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர். பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், பள்ளிக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |