அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு ஆன்லைனில் வழி கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவு ஜூலை இருபதாம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் பிஇ. பிடெக் படிப்புகளில், விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.,1 முதல் 7-ந் தேதி வரை அண்ணா பல்கலை.,யில் நடைபெறவுள்ளது. மாணவர்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்து செல்ல வேண்டும். 2-ம் கட்டமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் விண்ணப்பித்துள்ளனர்.