Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது…. முதன்மை கல்வி அலுவலர் திடீர் எச்சரிக்கை….!!!

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும், பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் தங்களுடைய குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதை மீறி செல்போன் கொண்டு வருபவர் களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படும். இதனையடுத்து மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா என்பதை வாரத்திற்கு 2 முறை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு பேருந்தில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளிடம் படிக்கட்டுகளில் நிற்கக்கூடாது எனவும், பேருந்துகளில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுரை வழங்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து மாணவ – மாணவர்கள் பள்ளிகளில் உணவு அருந்தும் போது சமூக இடைவெளி விட்டு தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும் எனவும், மாணவர்கள் சுத்தமான இடங்களில் அமர்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனையடுத்து தனியார் வாகனங்களில் பள்ளிக்கு வரும் மாணவ – மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ- மாணவிகளின் பெற்றோர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் எனவும், மாணவ – மாணவிகளின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |