ஜாதி கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மாணவர்கள் விதவிதமான வண்ண கயிறுகளை அணியக்கூடாது என கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ண கயிறுகளை கட்டுவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஜாதியை தூண்டும் விதமாக கயிறுகளை கட்டு மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.