Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் பயணம்…DEO -க்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!!!

மாணவர்கள் விபத்தில் சிக்குவதை  தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் சமீப காலங்களாக விபத்துகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி விபத்தில் சிக்கி பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் சமீப காலமாக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பள்ளி வளாகங்களுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருகை புரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம். மேலும் இதே போல் விதிகளை மீறி பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது மாணவர்களுக்கு வழக்கமாக  உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை ஒரே நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியே அனுப்பாமல் 15 நிமிட இடைவெளியில் தனித்தனி குழுக்களாக அனுப்ப வேண்டும், எனவும் மாணவர்களை படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்த்து குறைவான பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |