Categories
உலக செய்திகள்

மாணவர்கள் பயப்பட வேண்டாம்…. இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு…. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு…. பிரபல நாட்டில் வெளியுறவுத் துறை முடிவு….!!

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனது நாட்டு மக்களை உக்ரேனில் இருந்து வெளியேறும் படி ஏற்கனவே அறிவுறித்தியுள்ளது. மேலும்  உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தேவையில்லாமல் உள்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரேனில் இருந்து இந்தியா வர குறைந்த விமானங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஆலோசித்து வெளியுறவுத் துறை உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும்  கூடுதல் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவுவதற்காக அங்குள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் உதவி எண் 380997300483  மற்றும் மின்னஞ்சல் முகவரியும் அறிவித்துள்ளது.

Categories

Tech |