Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் கொண்டு வர உத்தரவு…. கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் பெங்களூரு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பள்ளிக்கு பைபிள் எடுத்து வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் இதற்கான அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பெற்றுக் கொண்டதாகவும், ஆன்மீக கருத்துக்கள் மற்றும் நன்நெறி போன்றவற்றை மாணவர்களுக்கு போதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியின் இந்த உத்தரவுக்கு இந்து, வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் சில அமைப்புகள் இந்த உத்தரவு கர்நாடகா கல்வி சட்டத்திற்கு எதிரானது என்று புகார் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே கர்நாடகா கல்வி அலுவலர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளியை பார்வையிட உள்ளார். அதேபோல் கர்நாடக கல்வித் துறை இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |