தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் நிலையை பரிசோதித்து அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாணவர்கள் விரும்பினால் ஆன்லைனில் பாடங்களைப் படிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவேண்டும். திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தால் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.