மாணவர்கள் வருகை பதிவு குறைந்தது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வருகை குறைவாக இருந்தாலும் அதன் பின் அதிக அளவில் மாணவர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஏமிஸ் இணையதளத்தில் மாணவர்கள் வருகை பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் கோவையில் மாணவர்களின் வருகை பதிவு ஆய்வு செய்யப்பட்டபோது, பல பள்ளிகளில் வருகை பதிவு 75 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளை விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது மாணவர்களின் வருகை இவ்வளவு குறைந்ததற்கு காரணம் என்ன என விசாரிக்கையில் சர்வர் சிக்கல், போதிய இணையதள வசதி இல்லாமை போன்றவற்றின் காரணமாக வருகைப் பதிவை குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மாலை இரவு வரை வருகைப்பதிவு பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி அருளானந்தம் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஆன்லைன் வருகைப் பதிவை ஆசிரியர்கள் அவரவர் மொபைல் போன் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். சிக்னல் கோளாறு காரணமாக பதிவு செய்தபின் கிரீன் சிக்னல் வர நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வேகம் அதிகமாக கிடைக்கும் வகையில் வை-பை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் இதன் மூலமாக எம்எஸ் பதிவு மற்றும் ஆன்லைன் வருகை பதிவில் சிக்கல் இருக்காது எனவும் கூறியிருக்கிறார்.