Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் ஷாக்…! பொதுத்தேர்வு எழுவதில் சிக்கல்…. பெற்றோர்கள் பரபரப்பு கோரிக்கை…!!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் காந்திநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்து-ஆதியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருஷ்டி கழிக்கும் பொருட்கள் விற்பனை மற்றும் கூலி வேலை செய்து, 100 நாள் வேலை போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் இவர்களின் குழந்தைகளை பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதிச் சான்று இல்லாத காரணத்தினால் பொதுத்தேர்வு எழுத முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

அவர்கள் பலமுறை சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் இதுவரை சாதி சான்றிதழ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும், தாங்கள் தான் படிக்கவில்லை எங்களுடைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே உடனடியாக சாதிசான்றிதழ் வழங்க கோரி பள்ளி சீருடையுடன் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பமனு அளித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |