தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியானது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அரையாண்டு தேர்வு விடுமுறை 10 அல்லது 11 நாட்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை அதிகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.