தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்துவதற்கு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளி கல்வித்துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், “அரசு பள்ளிகளை ஆய்வு செய்ததில், மாணவர்களிடம் அடிப்படை வாசிப்பு தன்மைகூட இல்லை. அவர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் மட்டுமே பெறுகின்றனர். எனவே, மாணவர்கள் 50-60% மதிப்பெண் பெறும் வகையில், அவர்களின் தரத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.