தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல் நிறைஞ்ர் ஆகிய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 4-ஆம் தேதி முதல் இந்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற 30-ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்கலைக்கழக வேலை நாட்களில் நேரில் வந்தோ அல்லது WWW.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.