மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் கல்லூரிகள், மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள், துறையினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்கவும், சிபிசிஐடி விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.