தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மரணம் வெறும் செய்தியாக கடந்து போய்விடுமோ என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் அதிமுக நாங்களும் நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் நடத்தினோம் என்று கூறி வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் நாளை தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் என்று அமைச்சர்மா .சுப்பிரமணியன் இன்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அரசியல் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, தமிழ் வழி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லி சொல்லியே அவர்களுடைய அச்சத்தைப் மேலும் அதிகப்படுத்தி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களின் மனநிலையை இழந்துவிடுகிறார்கள். மாணவர்களை பயமுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழு பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.