Categories
மாநில செய்திகள்

மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…… கல்லூரி மாணவர் கைது…. 6 பேருக்கு வலைவீச்சு….!!!

திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்த கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பகுதியிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்த முதலாமாண்டு மாணவர் குமாரை அக்கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 29-ம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். மேலும் அக்கல்லுரியை சேர்ந்த 7 மாணவர்கள் குமாரை ராகிங் செய்ததாக கூறப்படுகின்றது. அவர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கைது செய்த மனோஜிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது நாங்கள் ராகிங் செய்ததால் குமார் தற்கொலை செய்து கொள்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார் . இதை தொடர்ந்து அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கொலை முயற்சி, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |