Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளிடம் பேசுவதில் தகராறு”…. 2 கோஷ்டி பள்ளி மாணவர்கள் மோதல்….பரபரப்பு….!!!!!

மாணவிகளிடம் பேசுவதில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பேருந்து நிலையம் இருக்கின்றது. இங்கே நேற்று முன்தினம் சில பள்ளி மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டார்கள்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின் தகவல் அறிந்து வந்த போலீசார் கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது மாணவர்கள் தெரிவித்ததாவது, மாணவிகளிடம் பேசுவது குறித்து ஏற்பட்ட தகராறில் 2 கோஷ்டியாக பிரிந்து சண்டை போட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி போலீசார் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

Categories

Tech |