கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது. மேலும் 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டுகளில் இந்த திட்டத்தில் சேராத மாணவிகளும் கல்வி நிறுவனங்கள் மூலமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாணவிகளுக்கு சந்தேகம் இருந்தால் சமூக நல இயக்குனராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தின் 9150056809, 9150056801, 9150056810 எண்களை தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளார் .