Categories
மாநில செய்திகள்

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய…. அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சில காலமாகவே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் சில மாணவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே இது போன்று இனி மாணவர்களுக்கு நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், தமிழகம் முழுவதும் அனைத்து விதமான பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொற்று ஏற்படாதவாறு வளாக சூழலை உருவாக்க வேண்டும். எனவே மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும்.  அதில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் 2 பேர், பள்ளி நிர்வாகப் பிரதிநிதி, ஆசிரியரல்லாத பணியாளர் உள்ளிட்டோர் இடம்பெறவேண்டும்.

அந்தக்குழு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வளாக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். பள்ளியின் முதல்வர் நிரந்தர உறுப்பினராகவும் மற்றவர்கள் சுழற்சி முறையிலும் நியமிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு மேல் ஒருவர் அந்த பணியில் தொடரக்கூடாது. உறுப்பினர்கள் குறித்த விவரங்களை எமிக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |