மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இணையதளத்தின் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடியதோடு காவலர்களையும் தாக்கினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்தபோது முதல்வரின் அறையில் ஆணுறைகள் இருந்ததாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதன் நம்பகத்தன்மை உறுதியாகவில்லை.
இதேபோன்று கடந்த 13-ஆம் தேதி மாணவியின் விடுதிக்கு ஒரு வாலிபர் வந்து சென்றதாகவும், அந்த வாலிபர் முதல்வரின் மகன் என்றும் கூறி ஒரு போட்டோவை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த வாலிபர் தான் மாணவியை ஏதோ செய்திருக்கிறார் எனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மடிக்கணினிகளை திருட வந்த போது பதிவான நபரின் புகைப்படம் என்று கூறியுள்ளனர். மேலும் இணையத்தில் பொய்யான வதந்திகளை பரப்பி மக்களிடம் கிளர்ச்சிகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.