கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர் .ஆனால் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான மாணவிகள் இதனை வெளியில் கூறாமல் தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் பிளஸ் ஒன் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளிடம் ஆபாச பாடம் நடத்தியுள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. புகாரின் பெயரில் ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .