Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை தடுக்காவிட்டால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், அதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும். அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும். முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் அனைவருக்கும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி செலவை அரசே ஏற்கும். 35 வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத ஆதரவற்ற மகளிருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும். 100 நாள் ஊரக வேலை நாட்கள் 150 ஆக அதிகரிக்கப்படும். தினக்கூலி சம்பளம் ரூ.300 என உயர்த்தி வழங்கப்படும்.கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் 60,000 ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Categories

Tech |